150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்
இந்தியாவில் ஆக்ரா அருகே உள்ள தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் 5 வயது சிறுவன் ஒருவன் விழுந்த சம்பவம் நேற்று (14) பதிவானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் சிறுவனை மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், 8 மணித்தியால முயற்சியின் பின்னர் குறித்த சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்ட சிறுவன் உடல் சோர்வாக காணப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை