வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 68 பேருக்கு கொரோனா
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியிருந்த 68 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்று 1,883 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் புத்தாண்டுக் கொத்தணியில் 1,815 பேருக்கும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியிருந்த 68 பேருக்கும் தொற்று உறுதியானது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நாட்டில் தொற்று உறுதியானவரக்ளின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 60 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை