85 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து பலர் இறந்திருக்கலாம் என அச்சம்

85 பேருடன் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவத்திற்கு சொந்தமான C-130 விமானம், அந்நாட்டின் தென் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பலர் இறந்திருக்கலாம் என நம்பப்படுவதுடன், இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள, சுலு (Sulu) மாகாணத்தின், ஜொலோ (Jolo) தீவில் தரையிறங்க முற்பட்ட வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானத்தில் புதிதாக இராணுவ பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்ததாகவும், அப்பகுதியை ஆக்கிரமித்துள்ள அபூ செய்யப் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் பொருட்டு அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
5125 எனும் இலக்கத்துடனான குறித்த விமானம் தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில் அது தொடர்பான மீட்பு நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.