226 செம்மறி ஆடுகளை பட்டினியிட்டு கொலை செய்தவருக்கு நீதிமன்றம் தண்டனை!
226 செம்மறி ஆடுகளை பட்டினியிட்டு கருணைக்கொலை செய்த குற்றத்துக்காக விவசாயி ஒருவருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது.
பெவன் ஸ்கொட் என்ற குறித்த விவசாயி, அவரது பண்ணையிலிருந்த 226 ஆடுகளுக்கு உணவு வழங்காமல் பட்டினியிட்டு கொலை செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவருக்கு எதிராகக் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கு தொடரப்பட்டது.
அவர் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும், பண்ணை வளர்ப்புக்கு போதிய உதவிகள் கிடைக்கவில்லை என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
எனினும் விலங்குகளைத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு 9 மாதகால வீட்டுக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் 150 மணி நேரக் கட்டாய சமூக சேவை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், ஐந்து வருடங்களுக்கு விலங்குகளை அணுகுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை