இரசாயன பசளை இறக்குமதி தடை சிறுநீரக நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கே !
ஜனாதிபதியின் இரசாயன பசளை இறக்குமதியை தடை செய்தது எமது நாட்டு மக்களை சிறு நீரக நோயிலிருந்து முற்றாக பாதுகாப்பதற்காகவாகும் என வடிகாலமைப்பு அமைச்சரும் அரச பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சேதனப் பசளை உற்பத்தி கிராமங்களை ஆரம்பிக்கும் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மெதமுலன சேதனப் பசளை உற்பத்தி கிராமத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
சிறுநீரக நோயினால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். மக்கள் கஷ்டப்படுவதினை எம்மால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.மக்களை பாதுகாப்பதற்காகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளோம். இது பிரபல்யமான தீர்மானம் கடினமானது தான் ஆனால் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
நாடு பூராவும் உரத்திற்கு தட்டுப்பாடு நிலவுதாக கூறி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னால் ஒரு சில அரசியல் கட்சிகள் உள்ளன. தற்பொழுது எமது நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் தொகை நாடு பூராவும் பாரியளவில் அதிகரித்து வருகிறது.
வீரகெடிய பிரதேச செயலகப் பிரிவில் 58 சிறுநீரக நோயாளர்களுக்காக உதவு தொகை வழங்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார். இத்தோடு மேலும் பலரும் இந்த உதவியை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிலைமை மிகவும் பாரதூரமானதாகும். இதற்கு நாம் தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். இதன் முதல் கட்டமாகவே ஜனாதிபதியவர்கள் இரசாயன பசளை இறக்குமதியினை தடை செய்துள்ளார்.
தற்பொழுது நாடு பூராவும் உரத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதினால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவை மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்துக்களேதுமில்லை