நீராவியடிப் பிள்ளையார் கோவில்  வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று

முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோவில்  வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று (13) காலை ஆரம்பமானது.

அதிகாலை 3  மணியளவில், கோட்டைக்கேணி பிள்ளையார் கோவிலில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு,  உற்சவம் ஆரம்பமானது.

இந்நிலையில் கோவில் வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 09ஆம் திகதியன்று, பிரதேச செயலகத்தால் 10 பேர் மாத்திரமே, இந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது நாட்டில் 150 பேர் வரை நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதி இருப்பினும், சுகாதார விதிமுறைகளை பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களோடு கோவில் உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.