அம்பாறை வைத்தியசாலை கொரோனா அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெண்டிலேட்டர் வழங்கிவைப்பு.

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட திறன் வான்மையாளர் சங்கத்தினால் கொடையாளர்கள் இடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ரூபாய் 35 லட்சம் பெறுமதியான வெண்டிலேட்டர் உபகரணம் செவ்வாய்க்கிழமை (13) அம்பாறை பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் உப்புல் விஜயநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ச, அம்பாறை மாவட்ட அரச அதிபர் டி. எம். எல். பண்டாரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த வெண்டிலேட்டர் கொள்வனவிற்காக அன்பளிப்புச் செய்யப்பட்ட தொகையில் அதிகூடிய தொகையை வழங்கியிருந்த சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தக சங்கம் இதன்போது நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நினைவுச் சின்னத்தை சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் எம். எம். முபாரக், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஸவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.