களுதாவளையில் 21 சிறுவர்களுக்கு கொரோனா
மட்டக்களப்பு- களுதாவளை பகுதியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில், 21 சிறுவர்கள் உட்பட 22 பேருக்கு கொரரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த சிறுவர் இல்லமும் மூடப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இல்லத்திலுள்ள மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டமையினால், அவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
இதன்போது அந்த மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், கொரனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஏனைய சிறுவர்களுக்கும், அங்கு கடமையாற்றுபவர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டபோது, 19பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில், மேலும் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த சிறுவர் இல்லத்தில், 21 சிறுவர்களும் ஒரு விடுதி காப்பாளருமாக 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை