கிழக்கு மாகாணத்தில் உள்ள 11 விளையாட்டு மைதானங்களுக்கு ரூ.55 மில். நிதியொதுக்கீடு !

கிழக்கு மாகாணத்தில் உள்ள 11 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, 55 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதன்படி, ஒரு மைதானத்தின் அபிவிருத்துக்கு தலா 5 மில்லியன் ரூபாய் வீதம் செலவு செய்யப்படவுள்ளது.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் மூலம் இவ்வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்த வேலைத்திட்டங்களை உடன் ஆரம்பித்து விரைவில் நிறைவு செய்யுமாறு, கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு நிதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, அம்பாறை – தமண அலஹேன விளையாட்டு மைதானம், சம்மாந்துறை – நாவிதன்வெளி பொது விளையாட்டு மைதானம், பொத்துவில் – லாஹூகல பிரதேச சபை பொது விளையாட்டு மைதானம், கல்முனை – பொலிவேரியன் விளையாட்டு மைதானம், கல்குடா – பேத்தாளை பொது விளையாட்டு மைதானம் ஆகிய விளையாட்டு மைதானங்கள் அதிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மேலும், மட்டக்களப்பு – வேலூர் சக்தி பொது விளையாட்டு மைதானம், பட்டிருப்பு – முனைக்காடு பொது விளையாட்டு மைதானம், சேருவில – சேருவில பொது விளையாட்டு மைதானம், திருகோணமலை – அபயபுர பொது விளையாட்டு மைதானம், மூதூர் – மூதூர் பொது விளையாட்டு மைதானம், மூதூர் – கிண்ணியா பொது விளையாட்டு மைதானம் ஆகிய விளையாட்டு மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.