சதுப்புநிலகாடுகள் தினம் (26 ஆடி 2021)
சதுப்புநிலகாடுகள் தினம் (26 ஆடி 2021)
‘இயற்கைத் தரும் தடுப்புச் சுவர்கள் சதுப்புநிலக்காடுகளே!’
சதுப்புநிலக்காடுகளுக்கு பல பெயர்கள் உண்டு அவற்றில் சில சுந்தரவனக்காடுகள், அலையார்த்திக்காடுகள், கண்டல்காடுகள் சதுப்புநிலகாடுகள் என்றும் ஆங்கிலத்தில்; ( mangrove forests ) மங்ரோங் காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றது.
சதுப்புநிலக் காடுகள் கடல் அலைகளிலிருந்தும், கடல் அரிப்புகளிலிருந்தும், சூறாவளிகளிலிருந்தும் நிலப்பரப்புகளை மட்டும் பாதுகாக்கவில்லை சுனாமி என்னும் பேராலைகளின் சீற்றத்திலிருந்து கடலோரங்கள், கிராமங்களை பாதுகாப்பதன் மூலம் சிறந்த எல்லைக்காவலனாக திறம்பட செயல்படுகிறது. இயற்கை தரும் அற்புதச் தடுப்புச் சுவர்களே இந்த சதுப்புநிலகாடுகள் ஆகும்.
இவை சிறந்த வடி கட்டிகளாக செயற்படுகின்றது. சதுப்பு என்ற வகுப்பக்குள் பல பல்லுயிர் சூழல் உண்டு என்பதை பல்வேறு சமயங்களில் நாங்கள் கவனிக்க தவறியுள்ளோம். இப் பல்லுயிர் சூழலில் பல்லாயிரக்கணக்கானஉயிரினங்கள் உருவாகக் காரணமாக இந்த சதுப்பநிலகாடுகள் செயல்படுகின்றது.
இக் காடுகளில் உள்ள மரங்கள் தங்கள் வேர்கள் மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் காற்றினை உள் இழுத்து அதிகளவான மனிதன் உயிர் வாழத்தேவையான ஒட்சிசனை வழங்குகின்றது. சதுப்புநிலகாடுகள் நிலக்காடுகளைப் போல் பத்துமடங்கு காபனீர் ஒட்சைட்டை உள்வாங்கும் திறன் உடையது.
இக்காடுகளில் 80ற்கு மேற்பட்டதுமான வேவ்வேறு வகையான மரங்கள் காணப்படட்டாலும் தில்லை, நீர் முள்ளி, தீப்பரத்தை, நரிக்கத்தல், சுரப்புன்னை, வெண்கண்டல் போன்ற பார்வைக்கு அடர்த்தியான வேர்த்தொகுதிகளையும் இதன் வேர்த்தொகுதி சிக்கலான கட்டமைப்பை கொண்டிருப்பதனால் பல கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்புக்கு முக்கிய தளமாகவும் மீன்களின் முக்கிய இனப்பெருக்க தளமாகவும் காணப்படுகின்றது. பல கடல்வாழ் உயிரினங்கள் இந்த நிலப்பரப்பை ஒட்டி வாழ்வதினால் கடல்வளம் காக்கப்படுகின்றது. இக்காடுகள் இல்லையேல் கடலில் மீன்களே இல்லையென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட காடுகள்தான் வெளிநாட்டு உள்நாட்டு பறவைகளின் வாழ்விடமாகவும், இனப்பெருக்க தளமாகவும் காணப்படுவதினால்தான் சதுப்புநிலகாடுகள் பறவைகளின் மைதானம் என அழைக்கப்படுகின்றது. தேனீக்களின் சொர்க்கப்புரியாகவும் பல வனவிலங்குகளின் வாழ்விடமாகவும் காணப்படுகின்றது. இந்தியா, பங்களதேச எல்லைப்பு றத்தில் உள்ள கங்கை ஆற்றுப்படுக்கையில் உள்ள சுந்தரவனக் காடுகளே உலகில் மிகப் பெரிய கண்டல் காடுகள் என அழைக்கப்படுகின்றது. இங்குதான் உலகில் அருகிவரும் வாங்காளப்புலிகளின் வாழ்விடமாக இக்காடுகள் காணப்படுவது தனிச்சிறப்பு
இக்காடுகள் எப்பொழுதும் வெப்பமண்டலம், துணை வெப்பமண்டலத்திலுள்ள கடலோர சதுப்புநிலங்களின் செழிப்பாக வளரக்கூடியவை பொருளாதர ரீதியில் அதிகவருமானத்தை அள்ளித்தரக்கூடிய சுற்றுலாத்தளமாகவும் விளங்குகி ன்றது. இத்தகைய அதிசய எல்லைக்காவலனை மனிதர்கள் பல்வேறு தேவைக்காக விறகு, கால்நடை தீவனம், இறால்பண்ணைககளை அமைப்பதன்மூலம், சதுப்புநிலங்களை குளங்களாக மாற்றுவதனாலும், பல்வேறு வடிவிலான நில ஆக்கிரமிப்பினாலும், பிறசெயற்பாடுகளினாலும் மிகவிரைவாக அழிவடைந்து வருவதை காணக்கூடியாதாக உள்ளது.
உலகெங்கும் சதுப்புநிலங்கள் காணப்பட்டாலும் சதுப்புநிலக் காடுகள் மிகக் குறைந்த அளவிலே பல்வேறு நாடுகளில் காணப்படுகின்றது. எங்கேல்லாம் பவளப்பாறைகளும், சதுப்புநிலக்காடுகளும் அழிக்கப்பட்டனவோ அங்கு எல்லாம் பூமியின் நிலப்பரப்பு குறைவடைந்து உள்ளது. இவ்வகையான காடுகளின் தனிச்சிறப்பை அறியாமலும் கவனிக்கப்பாடாத மனித தவறுகலாள் தான் இயற்கையை சினம் கொள்ள வைக்கின்றான் என்பதை மனிதன் உணரவேண்டும் என ஏற்பட்ட அனர்த்தம்தான் சுனாமிபே ரலை அனர்த்தம். இதன் பின்னர்தான் சதுப்பு நிலக்காடுகளின் அருமைபெருமையை உணர்துகொண்டான் பேரலை தாக்கத்தின் போது இக்காடுகள் உள்ள பகுதி சிறிய அளவினால் பாதிக்கப்பட்டது. இக்காரணங்களை அறியாது பிறசூழல் விரோத செயல்பாடுகளினால் கட்டப்பட்ட கட்டிடங்கள் எல்லாம் இயற்கை பேரலைக்கு முன் எம்மாத்திரமென உணர்த்தியது. இதன் தார்பெரியம் அறிந்து என்னவோ மனிதன் பல இடங்களில் செயற்கை முறையான கண்டல் காடுகளை உருவாக்கி சிறு வெற்றியும் கண்டுள்ளான். நாம் வாழும் பகுதியில் மண்டைத்தீவு, காரைநகர் நுழைவாயிலில் கடற்படையினரால் உருவாக்கப்பட்ட செயற்கை கண்டல் காடுகள் சிறந்த உதாரணம்.
சதுப்புநிலக் காடுகளில் தனிச்சிறப்பை மக்கள் இன்னும் அறியவேண்டும் இக்காடுகள் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணரவேண்டும் என்பதற்காகவும் சதுப்புநிலக்காடுகள் சுற்றுச்சூழலுக்கு வழங்கும் சேவையை நினைவுப்படுத்துவதற்காக யுனெஸ்கோ நிறுவனம் யூலை 26ஆம் திகதியை உலக சதுப்புநிலகாடுகள் தினமாக கொண்டாடுகின்றது.
நன்றி
கருத்துக்களேதுமில்லை