O/L பரீட்சை பெப்ரவரி மாதம் நடைபெறும்
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மார்ச் 03 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
மேலும் உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை