விவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை

விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள மற்றும் 1.6 மில்லியன் குத்தகை விவசாயிகளுக்கும் விவசாய அடையாள அட்டைகளை வழங்க விவசாய அமைச்சு தயாராகி வருகிறது.

விவசாய அடையாள அட்டைகளை வழங்குவது 1971 இல் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அந்த திட்டம் தற்போது செயலற்றதாகியுள்ளது.

இதன் காரணமாக விவசாயியின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஒரு ஆவணம் இல்லாமை மற்றும் விளைச்சலுக்கான கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாமை உள்ளிட்ட பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

வயல் அல்லாத நிலங்கள் தொடர்பான தகவல் அமைப்பை அமைத்து, நில உரிமையாளர்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் இரண்டாம் கட்டத்தில் விவசாய அடையாள அட்டையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடையாள அட்டைகளை வழங்குவதனூடாக விவசாயிகளுக்கு பல நன்மைகள் கிடைக்கும் எனவும் விவசாய அமைச்சு சுட்டிக்காட்டுகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.