இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு?

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி ஏற்பட புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிக லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி காணக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் நல்ல பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலன் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பணவிஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களே உங்களுக்கு உபத்திரவமாக அமைய நேரலாம். ஆரோக்கியம் சீராகி வரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கருணையே வடிவான உங்களுக்கு எதிர்பாராத சில மாற்றங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய விஷயங்களில் சாதக பலன் காணலாம். நவீன தொழில்நுட்பங்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை வேண்டும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதித்துக் காட்ட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய எதிர்ப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்க பலரும் முனைவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது உத்தமம். புதிய கடன்களை தேவை இல்லாமல் வாங்குவதை தவிர்க்கவும். ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதற்கும் அஞ்சாமல் செயல்படக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்வரும் பகைகளை எளிதாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புது உத்வேகம் தரக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் வரும் வம்பு வழக்குகளை சமாளிக்க முற்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் நினைத்ததை திட்டமிட்டபடி செய்து முடிக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. வாகன வீதியான விரயங்கள் ஏற்படாமலிருக்க பராமரிப்பு தேவை.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் பிரியமுடன் செய்யக்கூடிய உங்கள் இராசிக்கு மற்றவர்களின் பார்வையில் எதிரியாக தோன்றுகிறார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்காத சில மாற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது உத்தமம். நின்று நிதானமாக யோசித்து செயல்படுவதன் மூலம் நல்ல பலன்களை காணலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் சற்று கவனம் தேவை. போட்டி பொறாமைகள் நீங்கும் முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மதிப்பு உண்டாகும். அரோக்கியம் மேம்படும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே நடக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். மனதிற்கு பிடித்தவரை மணந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக சீராக வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுசரணை தேவை. புதிய பொருள்கள் வாங்கும் யோகம் உண்டு. கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து பகையை உண்டாக்கி கொள்வதை தவிர்ப்பது உத்தமம். சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். கணவன் மனைவியிடையே தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

மீனம்:
மீனா ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பதை விட அதிக பலனை காண கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் கூடிய இனிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் ஆர்வம் குறையாமல் இருக்கும். விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் மேலோங்கும்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.