சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் பேராபத்து!

சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் பேராபத்து!

சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு, வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெறுவதில் சிரமம் இருப்பதாக வெளிநாடு செல்ல காத்திருப்போர் கருதுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இந்த விடயத்தினை தெரவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

சுமார் 25 நாடுகள் ஒரு சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளன. எனவே, அந்தந்த நாடுகள் அங்கீகரிக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுப்பது குறித்து வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம்.

ஆனால், வெளிநாடு செல்லும் எதிர்பார்ப்பில் இருந்து சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் குறித்தே சிக்கலே எழுந்துள்ளது.

ஆனால், தடுப்பூசி பெறாது வெளிநாடு செல்லும் எதிர்பார்ப்பில் உள்ளவர்கள், செல்லும் நாட்டில் எந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளதோ அதே தடுப்பூசியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.