இன்றைய ராசிபலன்!
இன்றைய ராசிபலன்!
11-08-2021
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிதாக ஒரு உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இருக்கும் இடையே இருந்த பரஸ்பர ஒற்றுமை மேலோங்கும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்ளவும். கணவன் மனைவியிடையே பிரச்சனையை தவிர்க்க கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பண வரவு சிறப்பாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்டநாள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பொருளாதாரம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பத்திலிருந்து தெளிவு பெறுவீர்கள். சுற்றி இருப்பவர்களைப் பற்றிய புரிதலை உண்டாக்கி கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரித்து காணப்படும். பெண்களுக்கு மன நிறைவுடன் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடமை, கண்ணியம் என்று செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய வாய்ப்புகள் அமையும். புது நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியிட பயணங்களின் பொழுது சற்று கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மனநிலையி உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அமைதியுடன் இருப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து எதிர்பார்க்கும் தொகை கைக்கு வர தாமதம் ஆகலாம். பொறுமை தேவை.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை, திட்டமிடல் மேலோங்கி காணப்படும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இந்த வழக்கு தொடர்பான விஷயங்களை சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கப் பெறும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற நண்பர்களின் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை மூன்றாம் நபர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை இடையூறுகள் ஏற்படலாம். பெண்களுக்கு நிதானம் தேவை.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வீண் பழிகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வு தேவை. உங்கள் வேலை ஒன்றை நீங்கள் ஒன்று என்று இருப்பது உத்தமம்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுக்கக் கூடிய தன்னம்பிக்கை வளரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய பொறுப்பு உணர்வு ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். கூடுமானவரை சாதுரியமாக செயல்படுவது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. கூடுமானவரை ஆரோக்கிய ரீதியான விரயங்கள் ஏற்படாமல் இருக்க உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது அவசியமாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வணிக ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். வெளியிடங்களில் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் நிம்மதி இருக்கும்.
கருத்துக்களேதுமில்லை