யாழ் கல்லுண்டாயில் கவுண்டது அரச பேருந்து!
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வீட்டுத்திட்ட பகுதியில் தனியார் பேருந்தினை முந்திச் செல்ல முற்பட்டு கட்டுப்பாட்டை இழந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து குடைசாய்ந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் காரைநகர் சாலைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் -காரைநகர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தே இன்று காலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில் குடைசாய்ந்துள்ளது.
தற்பொழுது கல்லுண்டாய் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த பகுதியில் இன்று காலை மழை பெய்ததன் காரணமாக வழுக்கல் நிலை காணப்பட்டதாகவும் வேகமாக வந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் விபத்தை நேரடியாக பார்த்தோர் தெரிவித்தனர்.
ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த பேருந்தின் சாரதி தப்பி ஓடியுள்ளதாகவும் மேலும் அவ்வீதியில் ஒவ்வொரு நாளும் குறித்த பேருந்தானது மிகவும் வேகமாகவே பயணிப்பதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை