கோப்பாய் பகுதியில் கோரவிபத்து!

 

யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்து காரணமாக பெண்ணொருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் விழுந்ததில் டிப்பர் சில்லினுள் அகப்பட்டு தலை பகுதி நசுங்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார். கணவர் மற்றைய பக்கமாக விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.