இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!
இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 51 ஆயிரத்து 16 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 17 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 3 இலட்சத்து 28 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்களின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் 737 பேர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை