ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்தியது உலக வங்கி..
ஆப்கானிஸ்தானை தாலிபான் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை அடுத்து அந்நாட்டுக்கு வழங்கும் உதவியை உலக வங்கி நிறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் நாட்டின் வளர்ச்சி, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து தாங்கள் மிகவும் கவலையடைவதாக உலக வங்கியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி கடந்த 2002 முதல் 5.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை