சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் விஜயகாந்த்!

நடிகரும், தே.மு.தி.கவின் தலைவருமான விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு செல்லவுள்ளதாக அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தே.மு.திக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார். விரைவில் நல்ல உடல் நலத்துடன் திரும்புவார். அதன் பின்னர் உங்கள் முன் மீண்டும் கம்பீரமாக பேசுவார். திருப்பூர் என்றுமே விஜயகாந்த் கோட்டை’ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.