செந்தில் தொண்டமான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், செந்தில் தொண்டமான் ஆகியோருக்கும் தொலைப்பேசியினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலில்,இந்தியாவில் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடு குடியிருப்பு,உட்கட்டமைப்பு வசதிகள், புலமைப்பரிசில்,சுயதொழில் மற்றும் குடியுரிமை வழங்க நடவடிக்கை போன்ற நலன்புரி திட்டங்களை முன்னெடுத்தமைக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றியை பகிர்ந்துக் கொண்டார். மேலும் இலங்கையில் உள்ள மலையக மக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
கருத்துக்களேதுமில்லை