தப்பினோம், பிழைத்தோம்…

ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியமைக்காக அமெரிக்க மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதற்கான நியாயத்தை விளக்கும் வகையில் நேற்று அமெரிக்க ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில் தலிபான்களுடனான இருபது வருட யுத்தத்தில் தாங்கள் வெற்றிபெற்றதாக அவர் கூறவில்லை. மாறாக ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வெளியேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளதாகவே கூறியுள்ளார்.

அதாவது ஆப்கானில் அமெரிக்க படைகள் பொறிக்குள் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவது எப்படியென்று தெரியாமல் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தலிபான்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் உடன்பட்டு அதன்பின்பே கட்டம் கட்டமாக வெளியேற ஆரம்பித்தனர்.

அமெரிக்காவின் இறுதிப்படையணி 31.08.2021 பகல் வெளியேறியது.

அமெரிக்க படைகள் வெளியேற ஆரம்பித்ததும், அவர்களை நம்பியிருந்த நேட்டோ படைகளும் அமெரிக்காவுக்கு முன்பாகவே மூட்டை முடிச்சுக்களுடன் முற்றாக கிளம்பிவிட்டனர்.

இவ்வாறுதான் 1989 இல் சோவியத் ரஷ்யாவின் படைகளும் ஆப்கானில் பொறிக்குள் மாட்டிக்கொண்டு தப்பிச்செல்வதற்காக அன்றைய முஜாஹிதீன்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திய பின்பே பாதுகாப்பாக வெளியேறினார்கள்.

தலிபான்களுடனான இருபது வருட நீண்ட போரானது, அமெரிக்கா வியட்நாமில் தோல்வியடைந்தது போன்றே ஆப்கானிஸ்தானிலிருந்து தோல்வியுடன் வெளியேறியுள்ளது. தாங்கள் ஆப்கான் போரில் வெற்றிபெறவில்லை என்பது அமெரிக்க ஜனாதிபதியின் உரையிலிருந்து வெளிப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.