மலேசியா: வேலை தேடி சென்ற 12 வெளிநாட்டவர்கள் சட்ட விரோதமாக நுழைந்ததாக கைது .
இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவின் Sarawak மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 12 ஆவணங்களற்ற குடியேறிகளை மலேசிய ராணுவம் திருப்பி அனுப்பியுள்ளது.
முதல் சம்பவத்தில் 3 குடியேறிகளும் இரண்டாவது சம்பவத்தில் 9 குடியேறிகளும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
“அவர்களை கைது செய்து விசாரித்ததில் அவர்களிடம் எவ்வித முறையான பயண ஆவணங்களும் இல்லை என்றும் அவர்கள் மலேசியாவிற்கு வேலைத்தேடி வந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது,” என ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை