இந்தியாவில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா- மேலும் 308 பேர் உயிரிழப்பு.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 29 இலட்சத்து 88 ஆயிரத்து 673 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால்,  ஒரே நாளில் 308 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 40ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 38 ஆயிரத்து 091 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 21 இலட்சத்து 38 ஆயிரத்து 092 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 4 ஆயிரத்து 10 ஆயிரத்து 048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.