அமெரிக்கா புறப்பட்டு சென்றார் மோடி!

ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி  (புதன்கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.

இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘இந்திய-அமெரிக்க நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், மண்டல மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இருநாட்டு நலன்கள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும்  தெரிவித்தார்.

தனது அமெரிக்க பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் எனவும், ஜப்பான், அவுஸ்ரேலியாவுடனான உறவுகளை ஒருங்கிணைப்பதாக அமையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் குவாட் மநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோசிகிடே சுகா ஆகியோருடன் தானும் கலந்துகொள்ளதாக தெரிவித்துள்ள மோடி, இது இந்தோ பசுபிக் மண்டலத்தில் எதிர்காலத் திட்ங்களில் முன்னுரிமையை அடையாளம் காணப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.