பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90இலட்சத்தை நெருங்குகின்றது!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90இலட்சத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 89இலட்சத்து 79ஆயிரத்து 236பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 40ஆயிரத்து 392பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 43ஆயிரத்து 467பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 186பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15இலட்சத்து 48ஆயிரத்து 211பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 946பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 72இலட்சத்து 90ஆயிரத்து 633பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.