எடப்பாடி பழனிச்சாமி வைத்தியசாலையில் அனுமதி

அ.திமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலையில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடலிறக்க பிரச்சனைக்காக அவருக்கு சத்திரசி கிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பான தொடர் பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மாலையில் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.