கொவிட் பயணத் தடை: சிவப்பு பட்டியலில் இருந்த ஏழு நாடுகள் மீதான தடை நீக்கம்!

பிரித்தானியாவில் கொவிட் பயணத் தடையில் சிவப்பு பட்டியலில் இருந்த, ஏழு நாடுகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், ஹைட்டி, பனாமா, பெரு மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் அகற்றப்படும்.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள் வரவேற்கப்படுவர்.

இதன்மூலம் அந்த நாடுகளுக்கு பயணம் செய்யவும், தொழில் மற்றும் வர்த்தக ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் இந்த முடிவு மூன்று வாரங்களுக்கு ஒருமுறை மாறும்.

வளர்ந்து வரும் கொவிட் மாறுபாடு அச்சுறுத்தல்களின் போது திருத்தப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் பிரித்தானியா வரும் பயணிகள், தனிமைப்படுத்தலுக்குப் பிறகே அனுமதிப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.