தொடர்ச்சியாக 11 வது முறையும் மாவட்ட சம்பியனாக நிந்தவூர் பிரதேச செயலக கபடி அணி தெரிவானது !
தொடர்ச்சியாக 11 வது முறையும் மாவட்ட சம்பியனாக நிந்தவூர் பிரதேச செயலக கபடி அணி தெரிவானது !
நூருல் ஹுதா உமர்
அம்பாரை மாவட்ட இளைஞர் கழகங்களின் விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான கபடி சுற்றுப்போட்டி திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் இறுதிப் போட்டியில் நிந்தவூர் பிரதேச செயலக அணியும், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியும் பங்குபற்றினர்.
இறுதிப் போட்டியில் அம்பாறை மாவட்ட சாம்பியனாக நிந்தவூர் பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மதினா இளைஞர் கழக அணி தெரிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக 11 வது முறையும் அம்பாறை மாவட்ட சம்பியனாக நிந்தவூர் பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மதினா இளைஞர் கழக அணி தெரிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை