தாய்லாந்தில் சட்டவிரோத நுழைந்ததாக 60 மியான்மரிகள் கைது…
தாய்லாந்தின் Muang மற்றும் Sangkhla Buri மாவட்டங்கள் வழியாக அந்நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக மியான்மரைச் சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இவர்கள் மூன்று குழுக்களாக தாய்லாந்துக்குள் வந்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
முதலில், மியான்மரின் Dawei, Magway, Yangon, Bago ஆகிய மாகாணங்களிலிருந்து வந்த 13 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் தாய்லாந்தில் வேலை பெறுவதற்காக 17 ஆயிரம் பட் முதல் 20 ஆயிரம் பட் வரை (37 ஆயிரம் இந்திய ரூபாய் முதல் 44 ஆயிரம் ரூபாய் வரை) தரகர்களுக்கு கொடுத்ததாக மியான்மரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இரண்டாவது குழுவாக வந்த 31 பேர் மியான்மரின் Dawei, Rakhine, Mawalamyine, Bago ஆகிய பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்றும் அவர்கள் தரகர்களுக்கு சுமார் 20 ஆயிரம் பட் (44 ஆயிரம் இந்திய ரூபாய்) செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மூன்றாவது குழுவாக 16 பேர் வனப்பகுதியில் கைது செய்யப்பட்டிருகின்றனர். இவர்கள் முகவர்களுக்கு 18 ஆயிரம் பட் (40 ஆயிரம் இந்திய ரூபாய்) செலுத்தியிருக்கின்றனர்.
தற்போது கைது செய்யப்பட்ட 60 மியான்மரிகளும் சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மியான்மருக்கு நாடு கடத்தப்படுவார்கள்.
கருத்துக்களேதுமில்லை