மலேசியாவில் தேடுதல் வேட்டை: ஆவணங்களற்ற வெளிநாட்டினர் 8 பேர் கைது
மலேசியாவின் Cyberjaya மற்றும் Puchong ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 8 ஆவணங்களற்ற குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“25 வெளிநாட்டினரை சோதித்ததில் ஆவணங்களற்ற 7 நைஜியர்களும் ஒரு பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவணங்களின்றி தங்கியிருத்தல், பாஸ் விதிமுறைகளை மீறியது, அனுமதி காலம் மீறி தங்கியிருத்தல் ஆகிய குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என மலேசிய குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மி தவுத் தெரிவித்துள்ளார்.
இந்த தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்ட அனைவரும் Semenyih குடிவரவுத் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை