நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் போகன்வில் தேசத்தின் முன்னாள் அதிபர் Hon James Tanis அவர்கள், சிறப்பு அதிதியாக பங்கெடுக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசத்தின் நெருக்கடியும் நாட்டின் மலர்ச்சியும் ( Nation under Threat – State in the Making ) என்பதனை மையப்பொருளாக கொண்டு இடம்பெறுகின்ற அரசவை அமர்வானது, எதிர்வரும் ( 4/5 Dec 2021) சனி, ஞாயிறு ஆகிய இருநாட்களுக்கு இணைவழியே இடம்பெற இருக்கின்றது. சர்வதேச வள அறிஞர்கள் பலரும் பங்கெடுக்க இருக்கின்றனர்.
பசுபிக் பெருங்கடல் தீவில் சுதந்திர தனிநாட்டு அரசியல் இறைமைக்காக நீண்டகாலமாக போராடி, 2019ம் ஆண்டு முதல் கட்ட பொதுவாக்கெடுப்பொன்றின் மூலம் நியூ பப்புவாக்கினாயாவில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாவதற்கு தமது அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்திய தேசமாக ‘போகன்வீல்’ இருக்கின்றது.
சர்வதேச ஒப்பந்தத்துக்கு அமைய விரைவில் முறையான இரண்டாம் கட்ட பொதுவாக்கெடுப்பினை போகன்வீல் தேசம் எதிர்கொண்டுள்ள நிலையில், அப்பொதுவாக்கெடுப்பினை முன்னெடுப்பவர்களில் ஒருவராக இருக்கும் Hon James Tanis , போகன்வீல் தேசத்தின் அதிபராக பொறுப்பினை வகித்தவர்.
நியூ பப்புவாகினியாவிடம் இருந்து 2023ம் ஆண்டு நிர்வாக மாற்றம் படிபடிமுறையாக நடைபெற்று, 2027ம் ஆண்டு சுதந்திரமும் இறைமையும் கொண்ட புதியதொரு நாடாக போகன்வீல் இப்பூமிப்பந்தில் அமைய இருக்கின்றது.
சுதந்திர நாட்டுக்கான வராற்று தடத்தினை கொண்டு ஒரு தேசத்தின முன்னாள் அதிபர் ஒருவர், சுதந்திரத்துக்கான போராடி வருகின்ற ஈழத்தமிழ் மக்களின் ஜனநாய போராட்ட வடிவதாக திகளுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் பங்கெடுத்துக் கொள்வது முக்கியமானதொரு நிகழ்வாக அமைந்துள்ளது.
தேசிய இனமுரண்பாடுகளும், பொதுவாக்கெடுப்பும் என்ற தொனிப்பொருளில் சிறப்புரையினை வழங்க இருக்கின்ற முன்னாள் அதிபர் அவர்கள், பொதுவாக்கெடுப்பு நோக்கிய செயல்வழிப்பாதையின் தமது அனுபவங்களை, ஈழத்தமிழர்களது பொதுவாக்கெடுப்பு நோக்கிய செயல்வழிப்பாதைக்கு பகிர்ந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
பேராசிரியர் Prof. Matt Qvortrup, அவர்கள் ஒரு நாட்டை எவ்வாறு உருவாக்குவது ( How to create a state ) தொடர்பிலான தமது புத்தக எழுத்தாக்கத்தினை அடிப்படையாக வைத்து கருத்துரை வழங்க இருக்கின்றார். தமிழ்நாட்டில் இருந்து பேராசிரியர் இராமு மணிவண்ணன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆகியோர் இக்கருத்துரையினை மையப்படுத்தி ஈழத்தமிழர்களின் சுதந்திர நாட்டுக்கான செயல்வழிப்பாதைகள் குறித்த கருத்துக்களை பகிரவுள்ளனர்.
கனடா ஒன்ராறியோ மாகாண உறுப்பினர் Aris Babikian, MPP, அவர்கள் ‘தமிழ் மக்களின் ,னப்படுகொலைக்கு அங்கீகாரம் பெறும் வழிமுறைகள்’ ( Ways and Means of getting recognition for Tamil Genocide ) தொடர்பில் கருத்துரையினை வழங்க இருக்கின்றார்.
கனேடிய நடாளுமன்ற உறுப்பினர் Heather McPherson, MP அவர்கள் ‘தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதில் கனடாவின் பங்கு’ தொடர்பில்
கருத்துக்களேதுமில்லை