SLSI, CAA இனால் அங்கீகரிக்கப்பட்ட எரிவாயுவை மாத்திரமே சந்தைக்கு விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் உறுதியளிப்பு!
இலங்கை தர நிர்ணய நிறுவனம் (SLSI) மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் ( CAA) அங்கீகரிக்கப்பட்ட தரத்திற்கு அமைவான எரிவாயு மாத்திரமே எதிர்காலத்தில் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நிறுவனம் உறுதிமொழி கடிதம் மூலம் இதனை தெரிவித்துள்ளது.
எரிவாயு சிலிண்டரின் கலவை அடங்கிய ஸ்டிக்கரும் சிலிண்டரில் காட்சிப்படுத்தப்படும் என நிறுவனம் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற வாயுக் கசிவுகள் தொடர்பில் நட்டஈடு கோரி சிவில் சமூக ஆர்வலரான நாகாநந்த கொடிதுவாக்கு தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை