வனம் மின்னிதழின் இலக்கிய கூடுகை !!
வனம் மின்னிதழின் முதலாம் வருட பூர்த்தியை முன்னிட்டு எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் ஒருங்கே சந்திக்கும் நிகழ்வு அக்கரைப்பற்றில் சனிக்கிழமை காலை நடந்தேறியது.
இதில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், விரிவுரையாளர்கள், படைப்பாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பல உள்நாட்டு வெளிநாட்டு எழுத்தாளர்களின் எழுத்தாக்கங்களை வெளியிட்டு வரும் வனம் மின்னிதழ் பிரதேச எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு வெளிநாட்டு வாசகர்களை பெற்றுக்கொடுத்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
இவ் ஒன்றுகூடலில் எழுத்து இலக்கியதுறையின் கடந்தகால, நிகழ்கால, மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பாக சுவாரிசியமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
கருத்துக்களேதுமில்லை