கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.

ஐக்கிய சமூக முன்னணியின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” எனும் திட்டத்தின் கீழ் நூற்றி எழுபது பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது ஐக்கிய சமூக முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், அமைப்பின் தலைவருமான ஏ.ஜி. அன்வரின் நெறிப்படுத்தலில் அமைப்பின் பிரதித்தலைவர் சிங்கள பாட ஆசிரியர்  ஏ.எச்.எம். நாசிக் அஹமட் இன் தலைமையில் இன்று மாலை கமு/அல் – ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்த கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை பிராந்திய முக்கியஸ்தருமான ரிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் கலந்து கொண்டார்.
கல்முனை கல்விவலய பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் இந்நிகழ்வில் கமு/ கமு/அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபர் ஏ. அப்துல் றஸாக், கமு/அல் – ஹிலால் வித்தியாலய அதிபர் யூ. எல். நஸார், இஃரா நிறுவன பணிப்பாளர் யூ. சத்தார், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய பிரதித்தலைவர் எஸ். தஸ்தகீர், மருதம் கலைக்கூடல் மன்ற தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ் மௌலானா, அல்- மீஸான் பௌண்டசன் பிரதிச்செயலாளர் ஏ.ஆர்.எம். ஜௌஸான், கல்முனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம். அஸீம், ரிஸ்லி முஸ்தபா கல்வி நிதிய முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது ஐக்கிய சமூக முன்னணியின்  செயலாளர், பொருளாளர், அமைப்பாளர், உட்பட நிர்வாக உறுப்பினர்கள்  மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வைத்து கமு/ கமு/ அல்- ஹிலால் வித்தியாலய மாணவர்களின் கல்வித்தேவைக்கு பயன்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் தொலைக்காட்சி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.