மானிப்பாய் மெமோறியல் கல்லூரியில் இடம்பெற்ற ஒளிவிழா சிறீதரன் எம்.பியும் பங்கேற்பு
யாழ்ப்பாணம் மெமோறியல் ஆங்கில பாடசாலையில் இன்றைய தினம் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் நத்தார் தின நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றது.
அருட்தந்தையர்களின் விசேட ஆராதனையோடு நிகழ்வுகள் ஆரம்பமானது. பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் அருட்தந்தையர்கள் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தனகோபி பாடசாலையின் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை