74 ஆவது சுதந்திர தின வைபவம் தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில்

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினமான இன்று (04) தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் சுதந்திர தின வைபவம் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கொடியினை பிரதேச செயலாளர் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைத்தார்.
“சவால்களை வெற்றி கொண்ட வளமான நாளையும் சுபீட்சமான தாய் நாடும் ” எனும் தொனிப் பொருளின் கீழ் இம் முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது
நாட்டுக்காக உயிர் நீத்த படை வீரர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியும் இதன் போது செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பிரதேச செயலக முன்றலில் மர நடுகையும் இடம் பெற்றது.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் ஊடகெதர மற்றும் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.