தமிழரின் இனப்பரம்பலைக் குறைக்க கிழக்கில் எடுத்த முன்னெடுப்புகளை வடக்கிலும் தீவிரப்படுத்துகின்றது அரசாங்கம்… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் – கி.சேயோன்)

(சுமன்)

கிழக்கில் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் பெரும்பான்;மை அரசாங்கம் எவ்வாறான முறையில் இனப்பரம்பலை மாற்றி தமிழர்களின் ஆதிக்கத்தைக் குறைத்ததோ அதே தற்போது வடக்கிலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்று பிரதேசசபை உறுப்பினருமான கி.சேயோன் தெரிவித்தார்.

இலங்;கைகத் தமிழ் அரசுக் கட்சியின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் இரண்டு நாட்கள் வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டு அங்கு இடம்பெறுகின்ற மீன்வர்களின் போராட்டம், குருந்தூர்மலைக்கான களவியம் போன்றனவற்றில் கலந்து கொண்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கைப் போன்றே வடக்கிலும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொல்லியல் என்ற பெயரில் கைப்பற்றப்பட்டு பௌத்த மயமாக்கல் செய்யப்படுகின்றது. கிழக்கில் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் பெரும்பான்;மை அரசாங்கம் எவ்வாறான முறையில் இனப்பரம்பலை மாற்றி தமிழர்களின் ஆதிக்கத்தைக் குறைத்ததோ அதே வழிமுறைகள் தற்போது வடக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எம்மத்தியில் பல பிரச்சனைகள் இருக்கையில் வெறுமனே பொருளாதாரப் பிரச்சனையை மாத்திரம் திணிக்க முற்படுகின்றனர் இந்த அரசாங்கமும், அதற்கு வால்பிடிக்கும் அரசியல்வாதிகளும். இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்காக பொருளாதார அபிவிருத்தி தேவையற்றது என்ற நாங்கள் சொல்லவில்லை. ஆனால் எங்கள் வளங்களை கையகப்படுத்தி, எமது இனப்பரம்பலை மாற்றி அதனூடாகப் போடப்படும் பொருளாதார அபிவிருத்தி என்கின்ற எலும்புத் துண்டுகளை நாங்கள் ஏற்க முடியாது.

எமது மக்களின் உரிமை, அபிவிருத்தி சார்;ந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வாகவே நாங்கள் சமஷ்டியைக் கோருகின்றோம். அந்தத் தீர்வு எமக்கு முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் எமக்கான பொருளாதாரத்தை நாமே உருவாக்க முடியும். எமது மக்களையும் பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமாக மீட்சி பெறச் செய்ய முடியும். அதை விடுத்து தற்போது இவர்கள் சொல்லும் பொருளாதாரமானது எமது மக்களுக்கென்று வழங்கப்பட்டாலும் அது பெரும்பான்மை சமூகத்தை மையப்படுத்தியதாகவே இருக்கும்.

இன்று நமது நாட்டின் சுதந்திர தினம். ஆனால், பல வழிகளிலும் சுதந்திரம் மறுக்கப்பட்ட  இனமாக தமிழினம் இருக்கின்றது. மக்களுக்கான போராட்டங்களுக்கு சுதந்திரமில்லை, சமூக வளைதளங்களில் பதிவிற்கான சுதந்திரம் இல்;லை, ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரமில்லை, அரசாங்கத்தின் முட்டாள்தனமான தீர்மானங்களை விமர்சிப்பதற்கு சுதந்திரமில்லை என்ற அடிப்படையில் எமது நிலங்களில் எமக்கான வழிபாடுகளை மேற்கொள்வதற்கான சுதந்திரமும் அற்ற நிலையில் இன்று தமிழ் சமூகம் இருந்துகொண்டிருக்கின்றது.

நீதிமன்ற உத்தரவுகளும் உத்தரவுகளாகவே இருக்கின்றன. அரசின் அச்சாணியாக இருக்கின்ற நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரச தரப்புகளே மீறும் நிலைமைதான் இன்று இலங்;கையில் இருக்கின்றது. ஒரு நாடு ஒரு சட்டம் என்று உருவாக்கி ஒவ்வொரு பிரதேசத்திற்கும், ஒவ்வொரு இனத்திற்கும், ஒவ்வொரு சாராருக்கும் ஒவ்வொரு சட்டம் என்ற ரீதியில் தான் திகழ்கின்றது.

இந்த நிலைமைகள் எல்லாம் மாற்றப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வின் ஊhடாக பொருளாதார மலர்ச்;சி எற்பட்டு எமது இனம் சகல வழிகளிலும் முன்னேற வேண்டும். வடக்கு கிழக்கை மையப்படுத்தி அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆக்;கிரமிப்புகள், திட்டமிட்ட பொளத்த மயமாக்கல்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.