அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்பு: பொலிஸ் தகவல்கள்….

அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரன் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் வீட்டில் கொள்ளையிடப்பட்ட அவரின் மனைவியினுடைய 12 பவுண் தாலிக் கொடியும், அதே பகுதியிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட 11 பவுண் நகைகளும் உருக்கப்பட்ட நிலையில், கொழும்பு – செட்டியார் தெருவில் கடந்த 05ஆம் திகதி கைப்பற்றப்பட்டன.

திருக்கோவில் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான குழுவினர், மேற்டி நகைகளைக் கைப்பற்றியிருந்தனர்.

இந்த நிலையில் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மட்டக்களப்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் 344 கிராம் தங்க நகைகளை பொலிஸார் மீட்டனர்.

விளக்க மறியல்

இந்த நிலையில் மேற்படி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில், கடந்த 31ஆம் திகதி இரவு – காரைதீவில் கைது செய்யப்பட்டு, 07 நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் இருவரையும், காரைதீவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலங்கான நிலையில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்று (08) உத்தரவிட்டது.

இதேவேளை, திருக்கோவில் மற்றும் செங்கலடிப் பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் – இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தவுக்கிணங்க, பொலிஸ் தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான பௌத்த பிக்குளை ஏற்றி வந்த கார் சாரதி மற்றும் காரின் சொந்தக்காரர் ஆகியோர் ஏற்கனவே விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள திருக்கோவில் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருதாகத் தெரியவருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.