கல்வியங்காடு மட்பாண்ட உற்பத்திக் கிராமத்தை மேம்படுத்த நடவடிக்கை.
சாவகச்சேரி நிருபர்
நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு மட்பாண்ட உற்பத்திக் கிராமத்தினை பாரம்பரிய மற்றும் கிராமிய கைத்தொழில் கிராமங்கள் ஒன்றிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்வாங்கும் செயற்திட்டம் 07/03 திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரம்புகள், பித்தளை,மட்பாண்டம், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டலில்-தேசிய அருங்கலைகள் பேரவையின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்படும் குறித்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்திருந்தார்.
அத்துடன் குறித்த மட்பாண்ட உற்பத்திக் கிராம பயனாளிகள் தமது தொழிலுக்கான மணலை கண்டாவளை பிரதேசத்தில் இருந்து பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக கண்டாவளை மற்றும் நல்லூர் பிரதேச செயலர்கள் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் நடவடிக்கையை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை