மிரள வைக்கும் ரஷ்ய படைகளின் திட்டம் …….
உக்ரைன் மீதான படையெடுப்பில் அடுத்த மாதம் 9 ஆம் திகதிக்குள் ஒரு பெரிய இராணுவ வெற்றியை பெற்றுக்கொள்ள ரஷ்யா முயல்வதால் அதன் தாக்குதல்கள் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரில் நாசி ஜேர்மனிக்கு எதிராக ரஷ்யா பெற்ற வெற்றியை குறிக்கும் நிகழ்வுகள் வருடாந்தம் மே 9 ஆம் திகதியன்று மொஸ்கோ ரஷ்ய செஞ் சதுக்கத்தல் நடத்தப்படுவது வழமை.
அன்றைய நாளில் இராணுவ வெற்றி அணிவகுப்பு மற்றும் அரச தலைவர் விளாடிமிர் புடினின் உரை ஆகிய நிகழ்வுகள் முக்கியமாக இடம்பெறுவது வழமை.
இந்த நிகழ்வுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், அந்த நிகழ்வுக்கு இடையில் உக்ரைனில் இராணுவ வெற்றியை அடையும் நோக்கத்துடன் தற்போது ரஷ்ய படை நகர்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக சிரியப் போர் நடவடிக்கைகளில் அனுபவம் பெற்ற ஜெனரலான அலெக்சாண்டர் டுவோர்னிகோவ alexander dvornikov தற்போது உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளின் கட்டளை தளபதியாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதிய தளபதியின் வியூகத்தில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால் மக்களின் இழப்புகள் குறித்த அச்சமும் தலையெடுத்துள்ளது.
நேற்றுமுன்தினம் கிழக்கு உக்ரைனில் உள்ள தொடருந்து நிலையம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஐந்து சிறார்கள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டு சுமார் 100 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை