ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியானது – பொலிஸ் பேச்சாளர்

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் ஆபத்தாக உள்ள நிலையில், அவர்கள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பவுசர் மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீ வைக்க முயற்சித்ததாகவும், பின்னர் கூட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியதாகவும் நிஹால் தல்துவ கூறினார்.
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும் இந்த மோதலில் பொலிஸார் பலரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.