2.30 மணியளவில் நாட்டை விட்டு வெளியேறும் மஹிந்த குடும்பம்? பரபரப்பாகும் திருகோணமலை
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
அத்துடன், அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் இன்று (10) காலை திருகோணமலை கடற்படை முகாமில் வந்திறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை, இளைஞர் குழுவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து கப்பல் மூலம் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் திருகோணமலை கடற்படை முகாமில் தற்போது பதட்ட நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பொது மக்களை நோக்கி துப்பாக்கிகளை காட்டும் வகையில் விமானப்படையினர் செயற்படுவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து மஹிந்த குடும்பம் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆவணங்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை