சா/த பரீட்சை அனுமதி அட்டைகள் விநியோகம் நாளை ஆரம்பம்
எதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டை விநியோகம் நாளை (13) ஆரம்பமாகவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை விநியோகத்தை நிறைவு செய்யவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரீட்சார்த்திகளுக்கு வழங்குவதற்கான பரீட்சை அனுமதி அட்டைகள் தபால் திணைக்களத்துக்கு ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் மற்றுமொரு பகுதி பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை