போராட்டங்களை நிறுத்த இருக்கும் ஒரே வழி இதுதான்! இடித்துரைத்த பௌத்த தேரர்…
இலங்கையில் தற்போது போராட்டகாரர்கள் கோரும் அரசியல் மறுசீரமைப்பை மேற்கொண்டால் மாத்திரமே மக்களின் அமைதியான போராட்டத்தை நிறுத்த கூடியதாக இருக்கும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
காலிமுகத் திடலில் நடக்கும் அமைதியான போராட்டத்தை நிறுத்த வேண்டுமாயின் தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.
நிலையான அரசியல் சூழலை உருவாக்கி, மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த தேவையான அடிப்படைகளை வழங்க வேண்டும் என்றார்.
கருத்துக்களேதுமில்லை